வெளி மாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகள் யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியால் உள் நுழைவது மற்றும் வெளி செல்வது முற்றாக தடை.!

வெளி மாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகள் யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியால் உள் நுழைவது மற்றும் வெளி செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

குறித்த பேருந்துகள் நேராக புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பஸ் தரிப்பிடத்திற்கு செல்ல வேண்டும் என்றும்
புதிய பஸ் தரிப்பிடத்தை இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பஸ் உரிமையாளர்கள், பயன்படுத்த மறுத்து வரும் நிலையில் யாழ் மாநகர சபையால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்து பொலிசாருக்கும் அறிவித்து இதனை மீறுபவர்கள் மீது  சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பேருந்துகள் வைத்திய சாலை வீதியை பயன்படுத்துவது தடை செய்யப்படும் பட்சத்தில் யாழ் நகரின் போக்குவரத்து நெரிசல் பெருமளவில்  குறைவடையும் என எதிர்பார்க்க படுகிறது.