தனியார் பஸ் உரிமையாளர்களின்பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது!

நாளைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த தனியார் பஸ் உரிமையாளர்களின்பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தங்களது கோரிக்கைகளுக்கு 90% தீர்வு வழங்க அதிகாரி கள் உறுதியளித்ததையடுத்தே இந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரி மையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.