இலங்கை நாடாளுமன்றஉறுப்பினர்களுக்கு தடுப்பூசி!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை(16) தடுப்பூசி வழங்கப்படும் என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதன்படி அஸ்ட்ரா செனெகா கொவிஷீல்ட் தடுப்பூசி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாளை கொழும்பு இராணுவ மருத்துவமனையில்  வழங்கப்படும் என அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தடுப்பூசியைப் பெற்றிருந்தார்.