முதல் மாத ஊதியமான 35,462 ரூபாயை வைப்பிலிட்டுள்ளார் யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்……!

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்கால் இனவழிப்பு தூபி அமைப்பதற்கு நிதி திரட்ட யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட வங்கிக் கணக்கிற்கு, தனது முதல் மாத ஊதியமான 35,462 ரூபாயை வைப்பிலிட்டுள்ளார் யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்.

மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து தனது ஊதியத்தை பொது சேவைக்காக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.