ஆழியவளை எழுக சமூக அமைப்பினரால் வாழ்வாதார உதவி…/

நிரந்தர  வருமானம் இல்லாத பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கு பிரான்ஸ் ஆழியவழை சங்கத்தின் நிதி அனுசரணையில்  ஆழியவளை எழுக சமூக அமைப்பினரால் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு அதன் தலைவர் அவே.பிரசாந்தன் தலமையில் காலை 12 மணியளவில்இ இடம் பெற்றது. இதில் பிரதம் அதிதியாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரபாகரமூர்த்தி, சிறப்பு அதிதிகளாக வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலக பிரதம கிராம உத்தியோகத்தர் தவராசா, ஆழியவளை கிராம உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்தனர். இதில் ஆழியவழை எழுக சமூக அமைப்பு உறுப்பினர்கள், பெண் தலமைத்துவ பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.