மனித உரிமை ஆணையாளரின் கடுமையான அறிக்கையை அடிப்படையாக கொண்ட புதிய தீர்மானம் – உறுதி செய்தது பிரிட்டன்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்வில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதை முகன்மை குழுவில் இடம்பெற்றுள்ள பிரிட்டன் உறுதி செய்துள்ளது.
ஜெனீவாவிற்கான பிரிட்டனின் தூதுவரும் நிரந்தரவதிவிடப்பிரதிநிதியுமாகிய ஜூலியன் பிரத்வைட் மனித உரிமை பேரவைக்கு இதனை அறிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
22ம் திகதி முதல் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் அமர்வு குறித்து திட்டங்களை உறுதிசெய்வதற்காக மனித உரிமை பேரவையின் கூட்டம் நேற்று இடம்பெற்றவேளை பிரிட்டன் தனது தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ளமை உறுதியாகியுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் பிரத்வைட் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் ஏற்கனவே இணைஅனுசரனை வழங்கிய தீர்மானத்தின் தொடர்ச்சியான தீர்மானமாக இது காணப்படும்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் கடுமையான அறிக்கையை அடிப்படையாக கொண்டதாக புதிய தீர்மானம் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.