ஜனாசாக்கள் எரிப்பதை இலங்கை நிறுத்துமாறு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உத்தரவிடவேண்டும்!

இலங்கையில் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதை உடனடியாக நிறுத்துமாறு மனித உரிமை பேரவை உத்தரவிடவேண்டும்- பிரித்தானிய முஸ்லீம் பேரவை

இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழ்நதவர்களின் உடல்கள் பலவந்தமாக தகனம் செய்யப்படுவதை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தடுத்து நிறுத்தவேண்டும் என பிரிட்டனின் முஸ்லீம் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கம் கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தொடர்ந்தும் தகனம் செய்வது குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளதாக பிரிட்டனின் முஸ்லீம் பேரவை தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யுமாகு தனது சொந்தகுழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை புறக்கணித்துள்ளமை குறித்து கவலையடைந்துள்ளதாக பிரிட்டனின் முஸ்லீம்பேரவையின் செயலாளர் நாயகம் ஜாரா முகமட் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் கொள்கை முன்னர் ஒருபோதும் எவரும் பின்பற்றாதது வேறு எந்த அரசாங்கமும் இவ்வாறன நியாயமற்ற பாரபட்ச நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஊலக சுகாதார ஸ்தாபனத்தின் கொள்கைகளை ஏற்று இலங்கை அரசாங்கம் தனது கொள்கையை மாற்றும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.