காசை யார் கொடுத்தது ? $400 மில்லியனை எப்படி இலங்கை இந்தியாவுக்கு திருப்பி செலுத்தியது என்று குழம்பும் இந்தியா

இந்தியாவிடமிருந்து நாணய மாற்று முறை அடிப்படையில் கடந்த வருடம் பெற்றிருந்த 400 மில்லியன் டொலர்களை மீளச் செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவிடமிருந்து எவ்விதமான கோரிக்கையும் எழாத போதிலும், சில ஊடகங்கள் தவறான அறிக்கைகளை பிரசுரித்திருந்ததையடுத்து அதனை தெளிவுபடுத்தும் வகையில் இந்த அறிவிப்பை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால்…

அது அல்ல தற்போதைய பிரச்சனை. இலங்கை தற்போது உள்ள நிலையில் எப்படி 400 மில்லியன் டாலர்களை திருப்பி செலுத்தியது என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. அரச கஜானா காலி. 2020 தொடக்கம் கொரோனா தொற்று. இன் நிலையில் சீனாவிடம் ரகசியமாக கடனை வாங்கி இந்தியாவுக்கு மீள செலுத்தியதா இலங்கை என்று, இந்திய தலைவர்கள் தலையை சுவரில் அடிக்காத குறையாக குழம்பிப் போய் உள்ளார்கள்.

இது போக நாங்கள் திருப்பிக் கேட்க்காமலே, இந்த பணத்தை தற்போது மீள செலுத்த என்ன காரணம் என்பதும் பெரும் கேள்விக் குறிதான் போங்கள்.