மாதவனை மேய்ச்சல்தரை வழக்கு முடியும் வரையில் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் கோரிக்கை…

மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை வழக்கு முடியும் வரையில் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும், மேய்ச்சல் தரையினை பாவிப்பதை தடைசெய்ய வேண்டாம் எனவும் மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தெரிவித்தார்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை பகுதியில் அத்துமீறிய அபகரிப்பு தொடர்பில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் கடந்த வாரம் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள கால்நடை பண்ணையாளர்களின் சார்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பண்ணையாளர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தலைமையிலான சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.