சிறப்பு அதிரடி படையினரால் மீனவர் ஒருவுக்கு சரமாரியான தாக்குதல்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் இன்று அதிகாலை மீனவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 5:30 மணியளவில் கடல் தொழிலிற்க்கு சென்றதாகவும் தொழில் நிறைவடைந்து அதிகாலை 4:30 மணியளவில் கரைக்கு வந்து வலையிலிருந்த மீன்களை தெரிவு செய்து விற்பனைக்கு கொண்டு செல்ரும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் தன்னையும் தனது மகனையும் அதிரடி படையினர் எங்கே கொண்டுவந்த சாமான் என்று மிரட்டியதாகவும், தமது வள்ளத்தை முழுமையாக சிறப்பு அதிரடி படையினர் சோதனை செய்த பின்னர் அதனது மகனையும், தன்னையும் அழைத்த சிறப்மு அதிரடி படையினர் தனக்கு சரமாரியாக உடல் முழுவதும் தாக்குதல் நடாத்தியதாகவும், தாக்குதலுக்கு உள்ளான வெள்ளை என்பவர் தெரிவித்தார்.

 

தற்போது தான் எழுந்து நடக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்கை செல்லவுள்ளதாகவும்,மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்