வி.எஸ்.சிவகரனின் வீட்டிட்கு நேரடியாக பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சென்று சமகால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் ஆலோசனை ?

 

மன்னாரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்றைய தினம் வவுனியாவிலிருந்து சென்றிருந்த பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடந்த ஆண்டு மாவீரர் தினத்தினை நினைவு கூர்ந்தமை தொடர்பில் துருவித்துருவி வினாக்களை கேட்பது போல கேட்டு உனக்கு புலனாய்வு அறிவே இல்லையா ? சமூக ஊடகங்களை திறந்தால் நீ எம்முடன் வேலை செய்வதை புட்டு புட்டு எழுதியுள்ளார்கள் . எப்படி விடயம் கசிந்தது ? உடனும் உன்னுடன் இருப்பவர்களை சரி பார் எனவும் ,

அத்துடன் சமகால அவருடைய சமகால அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலும் எவ்வாறு புலனாய்வு ரீதியாக செயற்பட வேண்டும் எனவும் வகுப்பு எடுத்துவிட்டு சென்றுள்ளனர் .

அதேநேரம், எதிர்காலத்தில் அவ்விதமான நினைவு கூரும் விடயங்களை எவ்வாறு சந்தேகம் வராதவாறு செய்வது தொடர்பிலும் பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அறிவுரைகளை வழங்கிச்சென்றுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக காணாமல் போனோர் தொடர்பில் சிவகாரன் கோத்த அரசை பாதுகாக்க சுமந்திரனுடன் இணைந்து கண் துடைப்பு கூட்டங்களை நடத்தியிருந்தார் என்பது தெரிந்ததே .