யாழில் தொடர்மழையால் 358 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 358 குடும்பங்களைச் சேர்ந்த 1,047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

கடும் மழை காரணமாக 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 5 பிரதேச செயலகப்பிரிவுகளில் 1,452 குடும்பங்களைச் சேர்ந்த 4,639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

89 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேர் மூன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.