பிரித்தானியாவில் பரவும் புதியவகை Covid-19 தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம்காணப்பட்டுள்ளார்!

இலங்கையில் முதலாவது புதிய வகையிலான கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் பரவிவரும் ஒரு வகையான புது வடிவிலான கொரோனா நோய்த் தாக்கத்திற்கு இவர் உள்ளாகியிருக்கிறார்.

இங்கிலாந்தில் இருந்து இவர் சமீபத்தில் இலங்கைக்கு வந்துள்ளதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆராய்ச்சியை பேராசிரியர் நீலிகா மலாவிகே மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் இணைந்து மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.