வடமராட்சி கிழக்கு அபிவிருத,தி குழு கூட்டம் இன்று இடம் பெற்றது.

வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அங்கைன் இராமநாதன் தலமையில் இன்று காலை 9:30 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்குகளை யாழ்மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கயன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிதகளான ச.சுகிர்தன்,ஐ.ரங்கேஸ்வரன், இதில்ன் பாராளுமன்ற உறுப்பினர்  சி.வி.விக்கினேஸ்வரனின் பிரதிநிதி சிற்பரன் , இராணவ அதிகாரிகள், காவல்துறை,கடற்படை,அரச உயர் மட்ட பிரதிநிதிகள்,பொது அமைப்பு பிரதிநிதிகள், ஆகியோர் மங்கள விளக்குகளை ஏற்றியதை தொடர்ந்து வரவேற்புரையை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரபாகரமூர்த்தி நிகழ்த்தியதை தொடர்ந்து அங்கஜன் இராமநாதன் தலமையில் பல் வேறு விடயங்கள் ஆராயப்பட்டது.


இதில் மாவட்ட மேலதிக அரச அதிபர் பிரதீபன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திருமதி எஸ் நிக்கிலாப்பிள்ளை,பிரதேச சபை தவிசாளர் அரியகுமார்,பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் பிரதிநிதி ச.சுகிர்தன்,மீன்பிடி அமைச்சரின் பிரதிநிதி ஐ.ரங்கேஸ்வரன்,மற்றும் மாவட்ட அரச திணைக்கழங்களின் தலைவர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் என சுமார் 100 பேர்வரை கலந்து கொண்டனர்.
இதில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் வன ஜீவராசிகள் திணைக்களத்தால் தேசிய பூங்காவில் தமது காணிகளை விடுவிப்பதற்க்கு தமது உறுதிப்படுத்தும் ஆவணங்களை பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்து தமது காணிகளை உறுதிப்படுத்தி அதனை விடுவிப்பதற்க்கு நடவடிக்கைகளை எடுக்குமாறும், வந்த்திராயன், உடுத்துறை கிராமங்களிற்க்கு வழங்கப்பட்ட பல நாள் கலங்க களை திருத்த வேலைகள் மேற்கொண்டு இரண்டு மாதங்களுக்குள் செயற்படுத்த வேண்டும் எனவும், அம்பனிலிருந்து மருதங்கேணி வரையான வீதி அமைப்பு தரம் இல்லாமையால் அதனை மாவட்ட அபிவிருத்தி சபைக்கு ஊடாக வீதி அபிவிருத்தி அமைச்சிற்க்கு முறையிடுவதெனவும், பல வேறு விடயங்கள் ஆராயப்பட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.