இரணைமடுகுளத்தின் 14 வான்கதவுக்திறக்கப்பட்டுள்ளது!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகள் திறக்கப்படுவதால் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது 14வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

அதிக நீர் வரத்து காணப்படுவதால் படிப்படியாக வான் கதவுகள் திறக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் நீர்பாசன திணைக்களம் அறிவுறுத்தி உள்ளது.

இதேவேளை பன்னங்கண்டி, முரசுமோட்டை, ஊரியான், கண்டாவளை, பரந்தன், உமையாள்புரம் உள்ளிட்ட தாழ்வு நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தி உள்ளது.