யாழில் சிங்கள அரசின் இனவெறித் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்! தொல்.திருமாவளவன்

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி நேற்றிரவு இடித்தழிக்கப்பட்ட நிலையில் இச் சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்

மேலும் கூறியிருப்பதாவது,

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூறும் விதமாக யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் அமைக்கப்பட்ட நினைவு தூண் சிங்கள அரசால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு இருக்கிறது.

சிங்கள அரசின் இந்த இனவெறித் தாக்குதலை, ஆணவப் போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றோம். யாழ்ப்பாண பல்கழைக்கழகத்துக்குள் அந்த நினைவு தூணை மீண்டும் நிறுவ வேண்டுமென சிங்கள அரசை வலியுறுத்துகின்றோம்.

#முள்ளிவாய்க்கால்_நினைவுத்_தூண் இடிப்பு!
சிங்கள இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட நினைவுத் தூணை மீண்டும் நிறுவ வேண்டும் என சிங்கள அரசை வலியுறுத்துகிறோம். pic.twitter.com/M25MqJUqy1

— Thol. Thirumavalavan (@thirumaofficial