வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் நான்கு ஆடுகளை நஞ்சூட்டி கொலை செய்ததாக பளை பொலிசில் முறைப்பாடு..!

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் நான்கு ஆடுகளை நஞ்சூட்டி கொலை செய்ததாக பளை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆடுகள் உண்பதற்க்கு இலைகளை உணவுக்காக போட்டு அதன்மேல் நஞ்சை ஊற்றியுள்ளதாகவும் இதனை உண்ட நான்கு ஆடுகளுமே இறந்துள்ளதாகவும், இறந்த ஆட்டை உடற் கூற்று பரிசோதனை செய்த மருதங்கேணி மிருக வைத்திய அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை பளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.கொலை செய்யப்பட்ட நான்கு ஆடுகளும் சுமார் 125000 /= பெறுமதியுடையது என்று நான்கு ஆடுகளையும் இழந்த ஆடு வளர்ப்பு  ஜீவனோபாயமாக கொண்ட பாதிக்கப்பட்ட குறித்த பெண்மணி தெரிவித்தார்
வடமராட்சி