வடமாகாணத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 496 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், யாழ் மாவட்டத்தில் 2 பேர் தொற்றிற்குள்ளாகினர். இணுவில் மற்றும் கொக்குவில் பகுதியைச்சேர்ந்த இருவர் தொற்றிற்குள்ளாகினர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவர், வவுனியா மாவட்டத்தில் 5 பேர், மன்னார் மாவட்டம் 5 பேர் தொற்றிற்குள்ளாகினர். என யாழ் சுகாதார வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்!