வடமராட்சி கிழக்கு ஆழியவளை சமூக அமைப்பு அமைப்பினரால் பிருத்தானியா ஆழிழவளை சமூக அமைப்பின் உணவு நிவாரணம்

வடமராட்சி கிழக்கு ஆழியவளை  சமூக அமைப்பு அமைப்பினரால்  பிருத்தானியா ஆழிழவளை அமைப்பின் ரூபா ஐந்து இலட்சம் நிதியில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கு உலர் உணவு நிவாரணம்  வழங்கும் நிகழ்வு அதன் தலைவரும் பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினருமான வே.பிரசாந்தன் தலமையில் பிற்பகல் 3:30 மணியளவில் இடம் பெற்றது.

இதில் பிரதம அதிதியாக வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம சேவகர் திரு.தவராசா,சிறப்பு அதிதிகளாக கிராம உத்தியோகத்தர் திரு.சுபகுமார், மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டு உலர் உணவுப் பொருட்களை வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததனர்.தொடர்ந்து  ஆழியவளை கிராமத்திலுள்ள 450 குடும்பங்களுக்கும் உணவுப் பொருட்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டது.