உலக அளவில் நேற்று ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 92 ஆயிரம் பேருக்கும், இங்கிலாந்தில் 55 ஆயிரம் பேருக்கும் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஆயிரத்து 387 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் உலகம் முழுவதும் நேற்று மட்டும் 7 ஆயிரத்து 100 பேர் கொல்லுயிரியால் கொல்லப்பட்டுள்ளனர்.

பெருந்தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 கோடியே 55 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது.