சுடலையையும் விட்டுவைக்காத திருட்டு மண் கும்பல்..!

வடமராட்சி கிழக்கு குடத்தனை கிழக்கு இந்து மயானத்தின் கேற்றை உடைத்து மயான வழங்கத்திற்குள் இனந்தெரியாத நபர்களால் கனரக வாகனங்கள் மூலம் இரவு வேளையில்  மணல் ஏற்றப்பட்டமை பிரதேச வாசிகளின் கடுமையான விசனத்திற்க்கு உள்ளாகியுள்ளனர்

தமது இந்து மயான சூழலில் மணல் அகழப்படுவதாக தமது கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலர், மற்றும் பருத்தித்துறை பொலிசாருக்கு அறிவித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், இதனால் தமது இந்துமயானம் அதன் சூழல் என்பன  முற்றுமுழுதாக அழிவடைந்துபோகும் நிலமை ஏற்படக்கூடும் என்றும் எனவே  இதனை கட்டுப்படுத்த உரியவரகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்