திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு இன்று!

திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இதனை நினைவு கூறும் வகையில் இன்றுடன் (02.01.2021) 15 வருட பூர்த்தி நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர் ஸ்ரீ ஞானேஸ்வரன் தலைமையில் திருகோணமலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம் பெற்றது.

2006.01.02 அன்று ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு சர்வதேச நீதிப்பொறி முறை ஊடான விசாரணை தேவை என்றும் இதன் போது வலியுறுத்தினர்