ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரிட்டன்

நான்கு வருடங்கள், 27 வாரங்கள் மற்றும் இரண்டு நாட்களுக்குப் பிறகு நாட்டைப் பிளவுபடுத்திய வாக்கெடுப்புக்கு பின்னர் பிரிட்டன் நேற்றிரவு ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுப் பாதையில் இருந்து வெளியேறியது.

இது பிரிட்டனை அரசியல் ரீதியாகப் பிரித்து, நவீன காலங்களில் உலக அரங்கில் நாட்டின் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

பிரிட்டனின் வெளியேற்றமானது ஒரு சுயாதீனமான, உலக சக்தியாக புதிய வாய்ப்புகளைத் தொடர நாட்டை விடுவிக்கும் என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

எனினும் விமர்சகர்கள் இது அதன் நெருங்கிய அண்டை நாடுகளுடனான பல தசாப்த கால ஒருங்கிணைப்பை மாற்றியமைக்கிறது மற்றும் பிரிட்டனை உடைப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதற்கும் அதன் சர்வதேச நிலையை குறைப்பதற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந் நிலையில் பிரிட்டன் பிரதமர், இது இந்த நாட்டிற்கு ஒரு அற்புதமான தருணம் என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்ததுடன்,எங்கள் கைகளில் எங்கள் சுதந்திரம் உள்ளது, நாம் அதைப் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.