இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடல் இன்று முதல் இராணுவத்தினரிடம் ஒப்படைப்பு

சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் பணிகள் இன்று முதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஏறக்குறைய 11 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க நிறுவனம் இலங்கையில் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இரத்து செய்து, பணியை இராணுவத்திற்கு இவ்வாறு மாற்றியுள்ளதன் மூலமாக குறிப்பிடத்தக்க நிதி சேமிக்கப்படும் என்று இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 01 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் பரிந்துரைப்பின் பேரில், தற்போது ஒரு தனியார் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் பணியை இராணுவத்திற்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.