யாழ் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று!

இன்று 30.12.2020 புதன்கிழமை யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 676 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேருக்கும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடுவில் – 8 ( ஒருவரை தவிர ஏழு பேரும் தொற்றாளர்களுடன் தொடர்புகொண்டிருந்தமையினால் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் )

சண்டிலிப்பாய் – 3 (தொற்றாளர்களுடன் தொடர்புகொண்டிருருந்தமையினால் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் )

தெல்லிப்பழை – 1 தொற்றாளருடன் தொடர்புகொண்டிருந்தமையினால் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர் )

புதுக்குடியிருப்பு – 1 ( ஏற்கனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்)

பரிசோதனைக்கு உட்பட்ட ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என யாழ் போதனாவைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்!

இதே வேளை மருதனார்மடம் சந்தை கொத்தணி 20 வது நாளில் 130பேர் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.