முடிவிற்க்கு வந்தது தவிசாளரின் வாகன ரயர் மாற்றும் விடயம்.!

பல் வேறு இழுபறிகளுக்கு மத்தியில் இன்றையதினம் தவிசாளரின் வாகன ரயர் மாற்றும் விடயம் இன்றைய தினம் முடிவிற்க்கு வந்துள்ளது.
பருத்தித்துறை  பிரதேச சபையின் வருட இறுதி அமர்வு இன்று காலை 9:00 மணிக்கு அதன் தவிசாளர் அரியகுமார் தலமையில் இடம் பெற்றது. இன்றைய தினமும் சபையில்  கூச்சல்குழப்பங்கள் மற்றும் கடுமையான வாத பிரதிவாதங்கள் இடம் பெற்றது.
இன்றும் தவிசாளரது வாகனத்திற்க்கு மாற்றியதற்கான கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் அனுமதியை அதன் துறை சார்ந்த அதிகாரி வழங்கப்படாமை தொடர்பில் ஏற்பட்ட வந்த பிரதிவாதங்களை அடுத்தே சபையில் குழப்பம் ஏற்பட்டு சபை அரச மணிநேரம் தவிசாளரால் ஒத்த வைக்கப்பட்படு மீண்டும் கூடியது.
அவ்வேளை குறித்த காசோலைக்கான ஒப்பம் சபை முன்னிலையில் வைக்கப்பட்டு தொடர்ந்து சுமூகமாக சபை அமர்வுகள் இடம்பெற்று பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.