2021 ஆம் ஆண்டு உலகில் பெரிய அழிவுகள் ஏற்படும் – பாபா வங்கா

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் உலகில் பெரிய அழிகள் ஏற்படும் என பல்கேரியா நாட்டை சேர்ந்த தீர்க்கதரிசியான பாபா வங்கா பல நாடுகளுக்கு முன்னர் எதிர்வுகூறியுள்ளார்.

1985 ஆம் ஆண்டு உயிரிழந்த பாபா வங்கா அடுத்த பல ஆண்டுகள் உலகில் நடக்கும் சம்பவங்கள் குறித்து எதிர்வுகூறியுள்ளார்.

பாபா வங்கா பல எதிர்கூறல்கள் உண்மையாகியுள்ளன. இதன் காரணமாக பலர் அவரை வழிபட ஆரம்பித்துள்ளனர்.

சுனாமி மற்றும் அமெரிக்காவின் உலக வர்த்தக நிலையம் மீதான பயங்கரவாத தாக்குதல் குறித்து வங்கா, பல ஆண்டுகளுக்கு முன்னரே தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டில் பல அனர்த்தங்களை உலக மக்கள் எதிர்நோக்க நேரிடும் என அவர் எதிர்வு கூறியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு பலமிக்க மூன்று பேர் “வலுவான ட்ராகன்” இணைந்து மனித நேயத்தை கைப்பற்றும் போது உலகம் பாரிய அனர்தத்தினால் துன்பத்திற்கு உள்ளாகும்.

வங்காவின் எதிர்வு கூறல்களை மொழிப் பெயர்த்தவர்கள் ட்ராகன் என்பது சீன என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டு ஐரோப்பா மீது முஸ்லிம் அடிப்படைவாதிகள் இரசாயன தாக்குதலை மேற்கொள்ளலாம் எனவும் பாபா வங்கா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 2021 ஆம் ஆண்டில் புற்று நோய்க்கு சிகிச்சையை கண்டறிய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஐரோப்பாவில் வீழ்ச்சி ஏற்படும் என வங்கா குறிப்பிட்டிருந்தமை முக்கியமானதாகும். பல்கேரியாவை சேர்ந்த வங்கா, பாரிய சூறாவளியில் தனது இரண்டு கண்களையும் இழந்தார். அதன் பின்னரே அவர் எதிர்காலம் தொடர்பான எதிர்வு கூறல்களை கூற ஆரம்பித்தார்.