பிரிட்டனில் காணப்பட்ட உருமாறிய கொரோனா பிரான்சில்அடையாளம் காணப்பட்டுள்ளது!

பிரிட்டனிலிருந்து பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பிரான்ஸிலும் ஏற்பட்டுள்ளது. ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

லண்டனிலிருந்து வந்தவர்களைப் பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் குணமடைந்துவிட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஸ்பெயினில் நான்கு பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மாட்ரிட்டில் நான்கு பேருக்குப் புதிய வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நலமாக இருக்கிறார்கள் என ஸ்பெயின் அறிவித்துள்ளது.