இன்று ஏற்பட்டுள்ள சனி மாற்றத்தால் எந்த ராசிக்காரர்கள் நன்மைபெற போகின்றார்கள் – முழு விபரம் இணைப்பு

சனிபகவான் நீதிமான் என்பதால் அவர் சோதனைதான் கொடுப்பார். தண்டனை என்ற பெயரில் புத்தி புகட்டுவார். சிலருக்கு கோடி கோடியாக கொடுப்பார். விபரீத ராஜயோகத்தையும் தருவார்.

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்,

27-12-2020 ஆம் திகதியான இன்று மார்கழி 12, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 06.21 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 01.19 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் சித்தயோகம் ஆகும்.

சனியின் சஞ்சாரம் பார்வை சனிபகவான்

தனுசு ராசியில் இருந்து மகரம் ராசியான தனது சொந்த வீட்டிற்குச் செல்கிறார். சனியின் சஞ்சாரம், பார்வையால் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அதிக பலன்களையும், லாபங்களையும், வளர்ச்சியும் ராஜயோகத்தையும் பெறப்போகின்றனர்.

அதே நேரத்தில் தனுசு, மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியும், துலாம் ராசிக்கு அர்தாஷ்டம சனியும் நடைபெறப்போகிறது. மிதுனம் ராசிக்கு அஷ்டம சனியும், கடகம் ராசிக்கு கண்டச்சனி காலமும் தொடங்கப்போகிறது. இதனால் என்ன பாதிப்பு வரும் அதற்கான பரிகாரம் என்ன என்ற பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமரப்போவதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. சனி கொடுப்பதை பத்திரமாக பாதுகாத்து தான தர்மங்கள் செய்யுங்கள்.

ரிஷபம்

ரிஷபம் சனியால் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக படாத பாடு பட்டிருப்பீர்கள். அஷ்டம சனி முடிந்து பாக்கிய சனி தொடங்குகிறது. சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். நிறைய தர்மங்களை செய்யுங்கள். ஏனெனில் இது தர்ம சனி காலம். வேலையில் சம்பள உயர்வு புரமோசன் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நகை, பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுனம் சனிபகவான் இதுநாள் வரை கண்டச்சனியாக இருந்து கஷ்டங்களைக் கொடுத்தார் இனி எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக அமரப்போகிறார். எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். திடீர் பணவரவு கிடைக்கும். கஷ்டமில்லாமல் இந்த 30 மாதங்களை கடந்துவிடுவீர்கள்

கடகம்

கடகம் கடகம் ராசிக்காரர்களே இதுநாள் வரை ஆறாம் வீட்டில் அமர்ந்து உங்களை ஆகா ஓஹோ என்று வாழ வைத்தவர் சனி பகவான். எண்ணற்ற வருமானங்கள், செல்வங்களை கொடுத்து வந்தார். இனி சனிபகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமரப்போகிறார். சனிபகவான் உங்க ராசியை பார்ப்பதால் கண்டச்சனியையும் கஷ்டமில்லாமல் கடந்துவிடுவீர்கள். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விசா கிடைக்கும். சனி மிகப்பெரிய யோகம். வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும்.

Ad
சிம்மம்

சிம்மம் சனி பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். உங்கள் ராசி அதிபதிக்கு எதிரியாகவே இருந்தாலும் சனி ஆறாம் வீட்டு அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். சனி பகவான் தனது சொந்த வீட்டுக்கு வருவதால் நோய்கள் தீரும். கடன்கள் கட்டுப்படும். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும். இனி இரண்டரை ஆண்டு காலம் உங்களுக்கு ராஜயோக காலம். சுகங்கள் தேடி வரும். செல்வமும் செல்வாக்கும் கூடும்.

கன்னி

கன்னி கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்த நீங்கள், விபத்துக்களை சந்தித்த உங்களுக்கு துன்பங்களில் இருந்த விடிவுகாலம் பிறப்போகிறது. பூர்வஜென்ம புண்ணியங்களை கொண்டு வந்து அறுவடை செய்வீர்கள். நல்லது அதிகம் நடக்கும். சனி உங்க ராசிக்கு ஆறுக்கு உடையவர் ஐந்துக்கு உடையவர் என்பதால் வேலையில் இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு நன்மை தரும் இடமாற்றம் நடைபெறும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. பணவரவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி பெறும்.

துலாம்

துலாம் துலாம் ராசியில் சனிபகவான் உச்சமடைபவர் என்பதால் உங்களுக்கு எந்த கெடுதலும் செய்யமாட்டார். நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் பாதிப்புகள் இருக்காது. சனியின் பத்தாவது பார்வை உங்க ராசி மீது விழுவதால் தொழில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். வீடு, கார் என வாங்குவீர்கள். பணவரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் நோய்களும் வெளிப்படும். நோய்களை குணப்படுத்துவீர்கள். தனவரவு அதிகரிக்கும். ஆசைகளை குறிக்கோள்களை சனி நிறைவேற்றுவார்.

விருச்சிகம்

விருச்சிகம் கால புருஷனுக்கு எட்டாவது ராசி. ஏழரை ஆண்டுகாலமாக சனி விருச்சிகத்தை ஆட்டி படைத்தது. இனி நன்மைகள் தேடி வரும் காலம்.வராத பணம் தேடி வரும் முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். ஏழரை ஆண்டுகாலமாக துன்பப்பட்டு சாவின் கடைசி நுனிவரை பார்த்து விட்டு வந்திருப்பீர்கள். உங்களின் துன்பங்கள், துயரங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி கொடுக்கும். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார்.

தனுசு

தனுசு சனிப்பெயர்ச்சியால் அதிகம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள் கொஞ்சம் பெருமூச்சு விட்டுக்கலாம். காரணம் ஜென்ம சனி விலகுது அதே நேரத்தில் ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. தன வருமானமும் லாபமும் கிடைக்கும். சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம். எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் ஒரு கை பார்த்துடுவோமே என்ற தெம்பு வந்து விடும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி தொடங்குகிறது. சனி பகவான் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். முதல் சுற்றில் உள்ளவர்களுக்கு ஜென்ம சனி மன அழுத்தம், தடுமாற்றங்களை தருவார். வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை தருவார். அனுபவங்களினால் பக்குவப்படுத்துவார். இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாக கடந்து விடுவீர்கள். கடினமாக உழைப்பீர்கள், பொறுப்பு அதிகரிக்கும். உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். 30 வயதிற்கு மேற்பட்ட சிலர் தொழில் தொடங்குவீர்கள். கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

கும்பம் சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 12, 1, 2 ஆம் வீடுகளில் இருப்பது ஏழரை சனி காலமாகும். முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. 2020 ஆம் ஆண்டு முதல் கும்பம் ராசிக்கு விரைய சனியாக ஏழரை சனி தொடங்குகிறது. இந்த கால கட்டத்தில் பணத்தை பணமாக வைத்திருக்காமல் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். விபரீத ராஜயோகத்தையும் தருகிறார் சனி. காரணம் சனி பகவான் உங்க ஆட்சிநாதன். சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு பண்ணுங்க. அப்படி செலவு பண்ணாம சேர்த்து வைத்தால் தேவையில்லாத செலவு வரும் என்பதால் சொத்துக்களாக வாங்கி முதலீடு செய்வது நல்லது.

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு லாப சனி காலமாகும். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். சிலர் விமானம் ஏறி வெளிநாடு செல்வீர்கள். அந்நிய தேசத்து வருமானம் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்.