கிளி-கல்மடுக்குளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் பலி!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்மடுகுளத்திற்குள் மூழ்கி இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டது.

நேற்று (25) பிற்பகல் இரண்டு மணியளவில் அவர் நீரிழல் மூழ்கியிருந்தார்.

நண்பர்கள் அடங்கலாக மூவர் கல்மடுகுளத்திற்கு சென்றுள்ளனர். இதன் போது குறித்த இளைஞன் குளத்திற்குள் இறங்கிய போதே மூழ்கி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்மடுநகர் சம்புக்குளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இரத்தினம் லோகிதன் என்பவரே இச் சம்பவத்தில் மரணமடைந்துள்ளார்.

கடற்படை சுழியோடிகள் இன்று (26) காலையில் சடலத்தை மீட்டனர் மோலதிகவிசாரணைகளை தருமபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்!