லா லிகா காற்பந்து: ரியல் மெட்ரிட் அணி 10ஆவது வெற்றி

20 அணிகள் இடையிலான லா லிகா காற்பந்து போட்டித் தொடரானது  ஸ்பெயினில் நடைபெற்றறு  வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு மட்ரிட் நகரில் நடந்த லீக் போட்டியொன்றில்  நடப்பு சம்பியன் ரியல் மட்ரிட் அணி, கிரானடாவை  எதிர் கொண்டது.

விறுவிறுப்பான இப் போட்டியில் ரியல் மெட்ரிட் அணி ஆதிக்கம் செலுத்தினாலும் முதல் பாதியில் எதிரணியின் தடுப்பு அரணை தகர்த்து கோல் அடிக்க முடியவில்லை.

 

57-வது நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் கேஸ்மிரோ இக்  கோலை அடித்தார். கடைசி நிமிடத்தில் அந்த அணியின் கரிம் பென்ஜிமா 2ஆவது கோலை அடித்தார். முடிவில் ரியல் மெட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கிரானடாவை வீழ்த்தியது.

15ஆவது ஆட்டத்தில் ஆடிய ரியல் மெட்ரிட் அணி பெற்ற 10-வது வெற்றி இதுவாகும். அட்லெடிகோ மெட்ரிட், ரியல் மெட்ரிட் அணிகள் தலா 32 புள்ளிகள் பெற்றுள்ளன. கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் அட்லெடிகோ மெட்ரிட் அணி முதலிடத்தில் நீடிக்கிறது.