சந்திராயன் 2 மூலம் திரட்டப்பட்ட விவரங்களை வெளியிட்டது இஸ்ரோ!

சந்திராயன்-2, 2019ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டு, அதன் ஓர்பிட்டரானது செப்டம்பர் 2ஆம் திகதி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது.

சுமார் 16 மாதங்களாக நிலவின் சுற்றுவட்டப் பாதையிலுள்ள சந்திராயன்-2 ஓர்பிட்டரில் 8 ஆய்வுக் கருவிகளுள்ளன.

 

இந்த ஆய்வுக் கருவிகள் மூலம் இதுவரை 8 வகையான ஆய்வுகளை செய்துள்ள சந்திராயன் 2, அதுதொடர்பான விவரங்களை பெங்களூர் அருகேயுள்ள தரைநிலையத்திற்கு அனுப்பியுள்ளது.

இந்த விவரங்களை சரிபார்ப்பிற்குப் பிறகு இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவைப் பற்றிய அறிவியல் ஆய்வுகளுக்கு இந்த விவரங்கள் பயன்படுத்திக் கொள்ளப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.