கோட்டபாயவின் முக்கிய திட்டத்தினுள் யாழ்ப்பாணம் இணைப்பு

ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவால் இலங்கையில் நான்கு மாவட்டங்கள் மூலோபாய மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் யாழ் மாவட்டமும் அடங்குகிறது என பிரதி தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

இந்த திட்டத்தால் யாழ். மாவட்டத்திற்கு பல்வேறு நன்மைகள் நடைபெறும் என்பதில் ஐயம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்றையதினம் ஊர்காவற்றுறையில் நிர்மாணிக்கப்பட்ட வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலக கட்ட தொகுதி திறப்பு விழா நிகழ்வில் பேசும் போதே அவர் இதனை கூறினார். அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,

கடல் போக்குவரத்து மூலம் பொருட்களை ஏற்றல் இறக்கல் மற்றும் பயணிகள் போக்குவரத்துதுறைகளை நம்பி தொழில்களை செய்யும் தீவக மக்களுக்கு இன்று திறந்து வைக்கப்பட்ட கப்பற்துறை அமைச்சின் உப அலுவலகம் மற்றும் கடற்கலன் பரிசோதிக்கும் தளம் மூலம் பற்பல நன்மைகள் கிடைக்கப்போவதை இட்டு மகிழ்வடைகிறேன்.

எமது அழைப்பை ஏற்று கங்கேசன்துறை துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் கௌரவ ரோஹித அபேகுணவர்தன அவர்கள் மேற்கோள்வதை இட்டும் மகிழ்வடைகிறேன்.

இந்த விஜயம் மூலம் எமது வரலாற்று பெருமைமிக்க காங்கேசன்துறை துறைமுகம் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் மீண்டும் கட்டியேழுப்பப்படும்.

இந்திய அரசாங்கத்தின் உதவியால் இந்த துறைமுறைகத்தை அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது.

இந்த உதவித் திட்டத்தை பயன்படுத்தி எமது இந்த காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரித்து பொருளாதார பயன்களை யாழிற்கு கொண்டு வாருங்கள் என்றார்.