யாழ்.மக்களுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ் மாவட்ட மக்கள் கொரோனா தொற்று ஏற்படாதவாறு நத்தாரை கொண்டாடுங்கள் என யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்.

யாழ் மாவட்டத்தில் தற்பொழுது ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்படுகின்றார்கள் எனவே இனிவரும் காலங்களில் பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டிய காலமாகவுள்ளது

அதிலும் குறிப்பாக எதிர்வரும் நாட்களில் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் வருகின்றது பொதுமக்கள் நாட்டில் உள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மற்றும் மதத் தலைவர்களின் வழிகாட்டலைப் பின்பற்றி தங்களுடைய கொண்டாட்டங்களை செயற்படுத்த வேண்டும்.

நத்தார் புதுவருட கொண்டாட்டங்கள் தொடர்பில் பொலிஸ் திணைக்களமும் சிலநடைமுறைகளை அறிவித்துள்ளது அத்தோடு தேவாலயங்களில் மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் ஆலய பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது அதனை அனைத்து பொதுமக்களும் பின்பற்றி செயற்பட வேண்டும்.

பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடுதலை தவிர்க்கவேண்டும் கடந்த வருட கொண்டாட்டங்களை போலல்லாது இம்முறை தற்போது உள்ள கொரோனா நிலைமையினை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இவ்வருடநத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்களை செயற்படுத்துங்கள்.

ஏனெனில் தற்போது யாழ் மாவட்டத்திலும் கொரோனா தொற்று பரவியநிலை காணப்படுகின்றது அதனை மேலும் பரவாது தடுப்பதற்கு நாம் அனைவரும் சுகாதாரப் பகுதியினருக்கு ஒத்துழைத்து செயற்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் பொதுமக்கள் எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டங்களை அமைதியான முறையில் முன்னர் கொண்டாடியதை போலல்லாது சாதாரணமாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்