மருதனார்மடம் பொது சந்தை கொரோனாவைரஸ் தொற்று மேலும் அதிகரிப்பு!

மருதனார்மடம் பொதுச் சந்தை கோரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் 2 பேருக்கு கோவிட் – 19 நோய்த் தொற்று உள்ளமை இன்று (டிசெ. 16) புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த ஏழாலையைச் சேர்ந்த 2 பேருக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இன்று சங்கானை சந்தை வியாபாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 68ஆக அதிகரித்துள்ளது.