இலங்கை விமானப்படை விமானம் விபத்து விமானி பலி!

இலங்கை விமானப்படை பயிற்சி விமானம் திருகோணமலையில் விபத்து!

திருகோணமலையில் சீன விரிகுடாவிலிருந்து புறப்பட்ட PT-6 விமானம் கந்தளாயில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

கந்தளாய், சூரியபுர பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது என விமானப்படை முன்னதாக அறிவித்திருந்தது.

இரண்டு இருக்கைகள் கொண்ட விமானத்தில் ஒரு விமானப்படை விமானி மட்டுமே இருந்தார்.

விமானம் வயல்வெளியில் வீழ்ந்தது. விமானி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின்ற போதும், விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.