LPL தொடரில் கோல் க்ளடியேட்டர்ஸ் இறுதி போட்டிக்கு தெரிவு

LPL முதலாவது அரையிறுதி போட்டியில் கோல் க்ளடியேட்டர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

கோல் க்ளடியேட்டர்ஸ் அணிக்கும், கொழும்பு கிங்ஸ் அணிக்குமான LPL முதலாவது அரையிறுதி போட்டி நேற்று ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற கோல் க்ளடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய கொழும்பு கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் க்ளடியேட்டர்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

இதற்கமைய LPL தொடரில் இறுதி போட்டிக்கு முதல் அணியாக கோல் க்ளடியேட்டர்ஸ் அணி தெரிவாகியது