யாழ் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு முடக்கம்!

உடுவில் பி்ரதேச செயலக பிரிவு உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

உடுவில் பிரதேச செயலக பிரிவில் மருத்துவ – சுகாதார சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைள் முடக்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் பிரிவில் அமைந்துள்ளது.

இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 28 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

உடுவில்,
சுன்னாகம்,
சங்குவேலி,
கந்தரோடை,
ஏழாலை,
புன்னாலைக்கட்டுவன்,
குப்பிளான்,
ஈவினை,
இணுவில்,
தாவடி
ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன.

28 கிராம அலுவலகர் பிரிவுகளில் 26 பிரிவுகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் குறிப்பிட்டார்.