பிள்ளையானுடன் நுழைவாயிலை உடைத்த சகாக்கள் – பதற்றத்தில் பிரதேச சபை

வாழைச்சேனை பிரதேச சபையில் இன்றையதினம் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரதேச சபை கட்டிடத்தின் நுழைவாயில் மூடப்பட்டிருந்த அங்கு தனது சகாக்கள் சகிதம் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் நுழைவாயிலை உடைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச சபையின் உறுப்பினர்கள் வாயில் கதவை திறக்க மறுத்திருந்த போதிலும் நாடாளுமன்ற உறுப்பினரோடு வந்திருந்தவர்கள் நுழைவாயிலை உடைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வாழைச்சேனை பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் தோல்வியடையும் என்பதால், வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்காமலிருக்க தவிசாளர் பல பிரயத்தனங்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.