இது ஒரு தேவையற்ற கேள்வி’ என கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்த சம்பந்தன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பது முக்கியமான கேள்வி அல்ல, தமிழ் தேசிய சுட்டமைப்பு என்ன செய்கிறது? இது எங்கே பயணிக்கின்றது? தமிழ் மக்களை எங்கே அழைத்துச் செல்கின்றது? இவைதான் முக்கியமான கேள்வி என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஊடவியலாளர் ஒருவருக்கு தொலைபேசியில் வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை விடுதலைப் புலிகளின் தலைவர்தான் உருவாக்கினார் என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்துவிட்டு தொலைபேசியின் அழைப்பினைத் துண்டித்துவிட்டார்.

குறித்த ஊடகவியலாளர் மீண்டும் அழைப்பினை மேற்கொண்ட போது அவர், உங்கள் கேள்விகள் ஆக்கபூர்வமானதாக இல்லை, தமிழ் மக்களுக்கு உதவும் கேள்வி அல்ல, குழப்பத்தை ஏற்படுத்தும் கேள்விகள் இல்லை என கூறிவிட்டு மீண்டும் தனது தொலைபேசியின் அழைப்பினை துண்டித்துவிட்டார்.