அமைச்சர் சமல் ராஜபக்ச சுய தனிமைப்படுத்தலில்

அமைச்சர் சமல் ராஜபக்ச அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ள கமத்தொழில் சேவைகள் திணைக்கள பணிப்பாளருடன் நெருக்கமாக பணியாற்றியதன் காரணமாக அமைச்சர் சமல், இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக அவர் வரவு செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.