கொரோனா அச்சத்தால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் இன்று (வியாழக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி மத்திய கிழக்கின் மூன்று நாடுகளிலிருந்து மேலும் 119 இலங்கையர்கள் அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியிலிருந்து 40 பேரும் கட்டாரின் தோஹாவிலிருந்து 29 பேரும் ஓமானின் மஸ்கட்டிலிருந்து 50 பேரும் இவ்வாறு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் தனியார் வைத்தியசாலையின் ஊழியர்களினால் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.