மெனிங் சந்தை வர்த்தகர்கள் ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டம்

பேலியகொடவில் அமைந்துள்ள புதிய மெனிங் சந்தையில் வியாபாரத்தை நடத்த தமக்கு வழங்கப்பட்ட இடம் போதுமானதாக இல்லை என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் எம்.சி.விதானாராச்சி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலருடன் இந்தப் பிரச்சினை குறித்து கலந்துரையாடியதாகக் கூறினார்.

இந்த வர்த்தகர்களுக்கு புதிய சந்தை வளாகத்தில் தரிப்பிட வசதி, உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் குளிரூட்டப்பட்ட அறைகள் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.