மத்திய கிழக்கில் சிக்கித்தவித்த 333 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மத்திய கிழக்கில் சிக்கித் தவித்த மேலும் 333 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் இன்று (வியாழக்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அதன்படி கட்டாரிலிருந்து 49 பேரும் ஜேர்தானிலிருந்து 284 பேரும் இவ்வாறு இன்றை தினம் நாடு திரும்பியுள்ளனர்.

நாட்டை வந்தடைந்த அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்துடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காகவும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.