தென்மேற்கு கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள புரெவி சூறாவளியானது திருகோணமலைக்கு கிழக்காக 110 கிலோமீற்றர் கடல்மைல் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், முல்லைத்தீவிற்கு தெற்கே 35 கிலோமீற்றர் தெற்கில் புயல் நிலப்பகுதிக்குள் நகர்வதாக யாழ் பல்கலைகழக புவியியல் துறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் உருவாகிய புரேவி புயலின் வெளிவலய எல்லை இன்று புதன்கிழமை மாலை 6.00 மணியளவில் முல்லைத்தீவு நகருக்கு தெற்கே 35 கி.மீ. தூரத்தில் நிலப்பகுதிக்குள் நகர்ந்துள்ளது.
எனவே கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கும் நிலையில் வரும் கனமழை நீடிக்கும்.
அத்தோடு, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கும்படியும், வீடுகளை விட்டு வெளியேறவோ அல்லது பொதுஇடங்களில் வெளியிடங்களில் ஒன்றுகூடவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புரெவி புயல் இலங்கையை இன்று இரவு கடந்துசெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது