அணுசக்தி ஒப்பந்தத்தை தொடரலாம் – ஜோ பைடன் அழைப்பு

அமெரிக்காவின் புதிய அதிபராக தெரிவாகியுள்ள ஜோ பைடன், ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீள அமுல்படுத்துவது மத்திய கிழக்கில் அணு ஆயுதப் போட்டியைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழியாகும்.

ஈரான் குறித்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த இணங்கினால் ஒப்பந்தத்துடன் அமெரிக்கா மீண்டும் சேரும்.

தம்மீதான பொருளாதாரத் தடைகளைக் குறைக்க முடியும் என்ற நிலையில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டு கடந்த காலத்தில் ஒப்பந்தம் அமுலில் இருந்தது.

ஆனாலும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக இந்த ஒப்பந்தத்திலிருந்து 2018இல் விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.