புரெவி அச்சம் – கரையோர பகுதிகளில் இருந்து 75000 பேர் வெளியேற்றம்

புரெவி சூறாவளி அச்சம் காரணமாக கிழக்கு மாகாணத்தின் கரையோரப்பகுதிகளி;ல் இருந்து 75,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மிகமோசமாக பாதிக்கப்படலாம் என கருதப்படும் திருகோணமலை மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளை சேர்ந்த மக்களை 237 தற்காலிக முகாம்களில் தங்கவைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சூறாவளி காரணமாக சில பகுதிகளி;ல் 200 மில்லிமீற்றர் மழை காணப்படலாம் என வானிலை அவதான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாளை சூறாவளி வடமேற்கு திசையில் நகரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.