தமிழர் தாயகத்தில் பிரவசித்தது புரெவி சூறாவளி!

புரவி சூறாவளி முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கு இடையில் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தச் சூறாவளி முல்லைத்தீவு ஊடாக மன்னார் சென்று, அங்கிருந்து நாளை அதிகாலை அரபிக்கடலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புரவி சூறாவளி கரையைக் கடக்கும்போது மணிக்கு 75 முதல் 85 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும், அதன்பின்னர் அதன் வேகம் மணிக்கு 95 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தச் சூறாவளி காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் காற்றுடனான கடும் மழை வீழ்ச்சி பாதிவாகியுள்ளதுடன் தொடர்ந்தும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.