கிளிநொச்சி குளங்களின் நீர்மட்டம் உயர்வு மக்களுக்கான எச்சரிக்கை!

கனகாம்பிககை குளத்தின் நீர் மட்டம் கிட்டத்தட்ட 6 அடியை அண்மித்துள்ளது அதன் கொள்ளளவு 10.6. எனவே தொடர்ச்சியாக மழை பெய்யுமாக இருந்தால் அதிகாலை வான்பாய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது. எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன், முதியவர்கள், மாற்றுவலுவுடையோர் கர்ப்பிணித்தாய்மார் மற்றும் சிறுவர்களை அருகில் உள்ள உறவினர் வீடுகளுக்கு முன்கூட்டியே தற்போதய கொரோணா சூழ்நிலையை கருத்திற்கொண்டு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.