கிளிநொச்சியில் வெடிபொருளுடன் பெண்ணொருவர் கைது

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடிபொருளுடன் பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மரக்கறி வாங்க சென்ற பெண்ணின் கான் பைப்குள் சிவில் உடை பொலிசார்  குண்ட வைத்துவிட்டு கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன

குறித்த பெண்ணின் வீடு தற்போது பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் கைது தொடர்பான தகவல் முழுமையாக வெளியாகவில்லை என தெரியவருகிறது.

அத்துடன், குறித்த பகுதியை காட்சிப்படுத்த அனுமதிக்கப்படவும் இல்லை என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.